எடியூரப்பா முதல்வராக வேண்டும் என கூறி 1001 படி ஏறி வழிபாடு செய்த எம்.பி!
கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் யாமம் நடத்தி வருகின்றனர்.
மேலும் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கர்நாடக அதிமுகவினரும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் , பாஜக எம்.பியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று முன்தினம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டு ஏறி சிறப்பு வழிபாடு செய்தார்.
#WATCH Mysuru: BJP Karnataka MP, Shobha Karandlaje climbs 1001 steps of Sri Chamundeshwari Devi Temple to pray for BS Yeddyurappa to become the next Chief Minister of the state. pic.twitter.com/coP7X0vRuo
— ANI (@ANI) July 19, 2019
அப்போது அவருடன் இருந்த பாஜகவினர் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினார்.பின்னர் பேசிய ஷோபா கரந்தலாஜே ,குமாரசாமி பெரும் பான்மையை இழந்து விட்டதால் தார்மீக ரீதியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என கூறினார்.
ஆளுநர் உத்தரவிட்ட பிறகும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் நாடகமாடி வருகிறார். அவரது சுயநல நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவே எடியூரப்பா முதல்வராக வேண்டும் என சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மனிடம் வேண்டிக் கொண்டேன் என கூறினார்.