2 மகன்களின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..! தானும் தற்கொலை செய்து கொண்ட துயரம்..!

Default Image

ஒடிசாவில் பெண் ஒருவர் தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ள துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது இரு மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டுத் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்புவா பகுதியில் உள்ள துருகுலியா கிராமத்தில் கியானபிரபா நாயக் என்ற பெண் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு நான்கு வயதான ஜான்சன், இரண்டு வயதான சாந்தனு மற்றும் ஆறு வயது மகள் தபஸ்வினி என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பெண்ணின் கணவர் பீம்சென் நாயக் வீட்டை விட்டு வயல்வெளிக்கு சென்று இருந்த பொழுது கியானபிரபா தனது இரு மகன்கள் ஆன ஜான்சன் மற்றும் சாந்தனுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது மகள் தபஸ்வினி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பொழுது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். கிராம மக்களில் சிலர் வீட்டின் மீது ஏறி ஓடுகளை அகற்றினர்.

அப்பொழுது கியானபிரபாவின் உடல் தூக்கில் தொங்கியதையும், அவரது இரண்டு மகன்களும் தரையில் கிடப்பதையும் கண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடைபெற்ற வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்