மணமேடையிலிருந்த மணமகனுக்கு செருப்படி கொடுத்த தாய் – வைரல் வீடியோ உள்ளே!
பெற்றோர் சம்மதமின்றி வேற்று மதத்து பெண்ணை திருமணம் செய்த மணமகனை செருப்பால் அடிக்கும் தாயின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிமிபூர் எனும் மாவட்டத்தில் இரு இளம் ஜோடிகள் உற்சாகமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். உறவினர்கள் நண்பர்கள் பலர் சூழ்ந்து நிற்க இந்த ஜோடிகள் மிக கோலாகலமாக சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் சுற்றி புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்திருக்கும் நேரத்தில் திடீரென இந்த ஜோடிகளை ஒரு பெண் செருப்பால் தாக்கியுள்ளார். குறிப்பாக மணமகனை ஒரு பெண் செருப்பால் அடித்துள்ளார்.
மேலும் அந்த பெண் மனமேடையையும் சேதப்படுத்தி வெறித்தனமாக அந்த மணமகன் மீது செருப்பை கழட்டி வீசி இருக்கிறார். மேலும் அவரை தவறான வார்த்தைகளாலும் சரமாரியாக திட்டியிருக்கிறார். அந்த பின் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை வெளியே இழுத்துள்ளனர். அதன் பின் விசாரித்த போது தான் தெரிய வந்துள்ளது அந்த பெண் வேறு யாருமில்லை மணமகனின் தாய் தானாம்.
இந்த ஜோடிகள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் மணப்பெண் வீட்டில் மட்டும் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் மணமகனின் உறவினர்கள் யாருமே திருமண விருந்திற்கு அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் மணமகனின் தாய் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
#A4Times#हमीरपुर
दूल्हे की माँ ने जयमाल के वक्त बेटे पर चप्पल से किया हमला, वीडियो वायरल,
माँ को यह रिश्ता मंज़ूर नहीं था,
सुमेरपुर थाना क्षेत्र में एक मैरेज हाल का है वीडियो.#ViralVideo #marriage pic.twitter.com/sVO6pDSndr— A4Times (@a4_times) July 4, 2021