Mother Beating Son [file image]
ஹரியானா : ஒரு கொடூர தாய் தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் தாயின் வீடியோ பார்ப்பதற்கே பதற்றமடைய செய்கிறது. இந்த வீடியோவை சிறுவனின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த தாய் தனது சொந்த மகனின் மேலே அமர்ந்து கொண்டு மாறி மாறி அடிப்பதும், வார்த்தைகளால் திட்டுவதும் தெளிவாக தெரிகிறது. இந்த கொடூர செயலை செய்தவர் ஒரு மருத்துவர் என்றும், சூரஜ்குண்ட் பகுதியை சேர்ந்தவரும் என தெரிய வந்துள்ளது.
தாக்கப்பட்ட சிறுவனின் தந்தை, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையிடம் புகார் அளித்த அவர், தனது மகனை அடிக்கும்பொழுது தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவரது மனைவி விஷம் குடித்துவிட்டு, குழந்தைக்கும் கொடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குழந்தை பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்று கொண்ட குழந்தைகள் நலக் குழுவின் (சிடபிள்யூசி) உத்தரவனின் பேரில் சூரஜ்குண்ட் பகுதி போலீசார், கொடூர தாக்குதல் நடத்திய தாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…