அதி தீவிரமாக பரவும் கொரோனா! இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு பாதிப்பு.!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் நேற்று ஒரே நாளில் 3,876 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், 2,49,992 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உள்ளது. தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனையில் 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந் குணமடைந்தோர் விகிதம் 82.75% ஆகவும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 17,27,10,066 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உலக முழுவதும் 159,607,702 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,317,747 பேர் உயிரிழந்துள்ளனர். 137,298,659 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா 33,515,308 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், இந்தியாவில் 22,992,517 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025