மிகுந்த முக்கியத்துவம் என்றால் மட்டுமே அவசரமாக விசாரிக்க முறையீடு செய்ய வேண்டும்…!உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Published by
Venu

மிகுந்த முக்கியத்துவம் என்றால் மட்டுமே அவசரமாக விசாரிக்க முறையீடு செய்ய வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்ற உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின்பதவிக்காலம் நேற்றுடன் (அக்டோபர் 2-ம் தேதி) முடிவடைந்தது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார் தீபக் மிஸ்ரா.மத்திய அரசு அவரின் பரிந்துரையை ஏற்றது.இந்நிலையில் ரஞ்சன் கோகோய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரஞ்சன் கோகோய் குடியரசுத் தலைவர் முன்னிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.இவர் உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதி ஆவார்.அதேபோல் வட கிழக்கு மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதியாகும் முதல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆவார்.

இதன் பின்னர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசுகையில், மனுக்களை தாக்கல் செய்துவிட்டு உடனே விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யக்கூடாது.மிகுந்த முக்கியத்துவம் என்றால் மட்டுமே அவசரமாக விசாரிக்க முறையீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

நேபாள் : பயங்கர நிலநடுக்கம் தற்போதைய நிலை என்ன?

நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

13 minutes ago

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…

32 minutes ago

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

10 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

11 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

13 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

13 hours ago