இதுவரை 130-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்துள்ள மனிதாபிமானம் மிக்க மனிதன்…!
பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா (49) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு மனிதராக வலம் வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்த்தொற்று காலத்திலும் மனிதாபிமானமிக்க உதவும் மனம் கொண்ட பலர் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அந்த வகையில் பாட்னாவில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முகேஷ் ஹிசாரியா (49) இந்த தொற்றுநோய் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவும் ஒரு மனிதராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு வரை 130 கொரோனா வைரஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடக்கம் செய்துள்ளார். கொடிய வைரஸ் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்கள் கூட இறுதி சடங்கிற்கு வராத சந்தர்ப்பங்களில், இதுபோன்ற 35 நோயாளிகளை இவர் தகனம் செய்துள்ளார்.
தினசரி கிட்டத்தட்ட இருபது தொலைபேசி அழைப்புகள் இவருக்கு வந்துவிடும். இவர் இறந்து போனவர்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளில் செய்துவருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த உடல்களை தகனம் செய்வதற்கு யாரும் உதவாத நிலையில், இறுதி சடங்குகள் சரியான முறையில் செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் 135 சடலங்களை தகனம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் கொரோனவால் பாதிக்கப்பட்ட, உதவி இல்லாதவர்களுக்கு இலவச உணவு ஏற்பாடு செய்யவும் தொடங்கியுள்ளார். இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒரு ரத்த வங்கியை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். தொற்றுநோயால் மனிதகுலம் ஆபத்தில் இருக்கும்போது அனைவரும் அதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.