நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது-மயில்சாமி அண்ணாதுரை
சந்திரயான் – 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது.மனிதன் செல்ல நீண்ட நாட்களாகும் என்பதால் தொழில்நுட்பம் மூலம் நிலவை ஆய்வு செய்ய முடியும்.
பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும். சந்திரயான் – 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது.
ஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும் முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும். துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் என்று தெரிவித்தார்.