துஷ்டி வீட்டில் துக்கத்தில் இருந்தவர்களின் தலையை தடவி கொடுத்து ஆறுதல் கூறிய குரங்கு
இன்று மனிதர்கள் மத்தியில் மறைந்து போன சில மனித பண்புகளை, ஐந்தறிவு மிருகங்களிடம் காண முடிகிறது. கர்நாடகா, நார்கண்ட் என்ற பகுதியை சேர்ந்த தேவேந்திரப்பார் கம்மார் என்ற முதியவர் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில், அவரது உடலுக்கு முன்பாக பல பெண்கள் துக்கத்தில் அழுது கொண்டிருந்தனர். ஊர் மக்களும், உறவினர்களும் அழுது கொண்டிருந்தபோது, அங்கு வந்த அனுமன் மந்தி வகையைச் சேர்ந்த குரங்கு வீட்டுக்குள் அழுது கொண்டிந்த பெண் ஒருவரின் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்து கட்டியணைத்து ஆறுதல் கூறியது.
ஐந்தறிவு மிருகத்தின் இந்த மனிதநேய செயல் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.