இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ 1862.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
தற்போது தமிழகத்தை பொருத்தவரை ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனுக்களையும் தாக்கல் செய்தது.அதன் மீதான பரிசீலனையும் நடைபெற்றது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்தியா முழுவதும் ரூ.1862.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ401.46 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…