மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்கும் – ராகுல் காந்தி
உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன்.
தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அதற்கு சரியான தீர்வு எட்டப்படவில்லை.
இதனை தொடர்ந்து விவசாயிகள் வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய மத்திய பாஜக அரசு மறுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இது குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி அரசு அவர்களின் நண்பர்களுக்காக மட்டுமே துணை நிற்கும். உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் இந்த நாடே துணை நிற்கும். நானும் இந்த நாட்டின் பக்கமே நிற்பேன் என்று பதிவிட்டு, IStandWithIndia என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு உள்ளார்.
मोदी सरकार सिर्फ़ मित्रों के साथ है।
लेकिन देश अधिकार व आत्मसम्मान के लिए सत्याग्रह कर रहे किसान-मज़दूर-विद्यार्थी के साथ है।
और मैं हमेशा देश के साथ हूँ और रहूँगा।#IStandWithIndia
— Rahul Gandhi (@RahulGandhi) September 22, 2021