வரப்போகிறது நவீன மாஸ்க்..!வெயிலில் காண்பித்தால் கொரோனா செத்து விடும்-ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் சாதனை…!

Default Image

வெயிலில் காண்பித்தால் கொரோனா போன்ற வைரஸிலிருந்து தானாகவே சுத்தமாகிவிடும் ஒரு புதுவகையான மாஸ்க்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது அதிமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா வைரஸினால் பாதிக்காமல் இருக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களும்,பல வண்ணங்கள் மற்றும் பல மாடல்களில் மாஸ்க் வாங்கி அணிகின்றனர்.இந்த வகையான மாஸ்க்குகள்,அடிக்கடி சலவை செய்து குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தும் வண்ணம் உள்ளன.

இந்த நிலையில்,இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியார்கள்,அறிவியல் முறைப்படி மாலிப்டினம் டை சல்பைடு,எம்ஓஎஸ்2 ஆகியவற்றைக் கொண்டு ஒரு புதுவகையான மாஸ்க்கினை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது,இந்த மாஸ்க்கை வெயிலில் காட்டினால் தானாகவே சுத்தமாகிவிடும்.மேலும்,இந்த மாஸ்க்கில் உள்ள கூர்மையான விளிம்புகள் கத்தி போன்று செயல்பட்டு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்நுழையாமல் அழிக்கின்றன.

இதுகுறித்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,”கொரோனா பரவல் மற்றும் குறைவான விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்குமாறு,மாஸ்க் மற்றும் பிபிஇ தயாரிக்கும் துணிகளுக்கு ஆன்டிமைக்ரோபியல் என்ற நுண்ணுயிர் கொல்லி பூச்சுகளை கலந்துள்ளோம்.இந்த நுண்ணுயிர் கொல்லியானது,ஒரே நேரத்தில் 96 வைரஸ்களை வடிகட்டுகிறது.அதுமட்டுமல்லாமல்,நுண்ணுயிர் கொல்லி பூச்சு கலந்து தயாரித்ததன் காரணமாக மாஸ்க்கினை 60 முறைக்கு மேலாக சலவை செய்து பயன்படுத்தலாம்.மேலும்,இந்த மாஸ்க்கை சூரிய ஒளியில் காண்பித்தால் வைரஸ்களை அழித்து தானாகவே சுத்தமாகி விடும்”,என்று கூறினார்கள்.

இந்த புதிய நவீன மாஸ்க் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்