MLA Sivakumar
MLA VS Sivakumar : நாடளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் எம்.எல்.ஏ. சிவகுமார் வாக்காளரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.எல்.யான எம்.ஏ.சிவகுமார் வாக்களிக்க வரிசையில் நின்ற ஒரு வாக்காளரை கன்னத்தில் அறையும் வீடியோவானது வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் குண்டூரில் தெனாலி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏ.விடம் வாக்காளர் ஒருவர் வரிசையில் வருமாறு கூறி உள்ளார். இதை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஏம்.எல்.ஏ சிவகுமார் திடிரென அந்த நபரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அறை வாங்கிய அந்த நபரும் பதிலுக்கு எம்.எல்.ஏ சிவகுமாரை தாக்க எம்.எல்.ஏவின் உதவியாளர்கள் அறைந்த அந்த நபரை சரமாரியாக தாக்கினார்கள். இதை கண்ட மற்ற வாக்காளர்கள் அந்த தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பிற்காக அங்க நின்றிருந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…
சோனிபத் : ஹரியானாவின் சோனிபத்தில் உள்ள ஓபி ஜிண்டால் குளோபல் என்கிற பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் விடுதிக்குள் சூட்கேஸில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக -…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்குக் கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு…