ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானமான ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் சென்றனர்.பின் அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனது.
காணாமல்போன இந்திய விமானப்படையின் ஏ.என் -32 விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.ஆனால் விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.பின் அருணாசலப்பிரதேசத்தின் மலைப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து அங்கு விமானத்தில் பயணித்த 13 பேரை தேடும்பணி இன்று நடைபெற்றது.
தற்போது இந்திய விமானப் படையின் ஏ.என்.32 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்தததில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என்பது தெரியவந்தது என்றும் தெரிவித்துள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…