வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.
வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி வருகின்றனர். தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி கொண்டே வருகின்றனர். பொதுவாக வியாழன் கோள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மாறுபட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. பூமியில் இருந்து வியாழன் 88.6 கோடி கிமீ தூரத்திலும், சனி 162 கோடி கிமீ தரத்திலும் தற்போது உள்ளன.
இந்த இரண்டு கோள்களும் ஒரே புள்ளியாக தோன்றினாலும், அவற்றுக்கு இடைப்பட்ட தூரம் 73 கோடி கிலோமீட்டர் ஆகும். இந்நிலையில், வருகின்ற 21-ஆம் தேதி அன்று மாலை 6 மணியளவில் மேற்கு வானத்தில் அவற்றிற்கு இடைப்பட்ட கோணத்தில் 1 டிகிரியில் 10ல் ஒரு பங்காக குறைந்து இரண்டு கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால், அவைகள் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சனி மற்றும் வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கி வரும் என்றாலும், இதேபோன்று மிக நெருக்கத்தில் வந்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது, 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28-ம் தேதி அவை அருகருகே வந்தன. ஆனால், அப்போது பகலில் சூரியனின் அருகில் இருந்து காட்சியளித்ததால், நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை. தற்போது, இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி இதை நாம் காண இருக்கிறோம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…