மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் – அமித்ஷா
எஸ்.பி.பி மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
எஸ்.பி.பி 50 நாட்களுக்கு மேலாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் இன்று 1.04 மணிக்கு காலமானார் என்று அவரது மகன் சரண் தெரிவித்தார். தற்போது இவரது மறைவுக்கு, பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், புகழ்பெற்ற இசைக்கலைஞரும் பின்னணி பாடகருமான பத்ம பூஷண், எஸ். பி. பாலசுப்பிரமண்யம் ஜி காலமானதால் ஆழ்ந்த வருத்தம். அவர் தனது மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் . அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி, என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Deeply saddened by the passing away of legendary musician and playback singer Padma Bhushan, S. P. Balasubrahmanyam ji. He will forever remain in our memories through his melodious voice & unparalleled music compositions. My condolences are with his family & followers. Om Shanti
— Amit Shah (@AmitShah) September 25, 2020