மேகதாது அணை விவகாரம்…! தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் …!

Default Image

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது.

இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது.

இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மேகதாது அணை தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை ரூ.5000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்தது.

காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் காவிரி ஆணையத் தலைவர் மசூத் ஹுசைன்  கூறுகையில்,தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு ஒப்புதல் தரமாட்டோம்.காவிரி ஆற்றின் படுகை பகுதிக்குள் மேகதாது அணை வருவதால் ஆணையத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும் என்றும்  காவிரி ஆணையத் தலைவர் மசூத் ஹுசைன் தெரிவித்தார்.

இந்நிலையில் மேகதாது  அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று  மனுதாக்கல் செய்கிறது.தமிழக அரசின் சட்டத்துறை ஒப்புதலை அடுத்து மேகதாது  அணை விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் இன்று  மனுதாக்கல் செய்கிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்