#Breaking:இந்தியா முழுவதும் 8 வாரங்கள் முழு ஊடங்கு-ஐசிஎம்ஆர் அறிவிப்பு..!!!

Default Image

இந்தியா முழுவதும் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆரய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வலியுறுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதுமான மருத்துவ படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் வசதிகள் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

அதனால்,கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,கிராமப்புற பகுதிகளிலும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.மேலும்,தமிழ்நாடு,கேரளா,டெல்லி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கொரோனா பரவல் 10 சதவிகிதத்திற்கும்மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,,நாடு முழுவதும் முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில்,”கிராமப்புறங்களில்  கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அங்குள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ரேபிட் ஆன்டிஜன் சோதனைகளை அதிக அளவில் நடத்த வேண்டும்.மேலும்,வைரஸ் தொற்று தேசிய அளவில் 21 சதவிகிதம் இருக்கும் நிலையில் சில மாவட்டங்களில் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எனவே,நாடு முழுவதும் கொரோனா தொற்று 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் முழு ஊடங்கு அவசியம் போட வேண்டும்.அதன்பிறகு,கொரோனா பரவல் குறையும் பட்சத்தில் படிப்படியாக தளர்வுகளை அந்தந்த மாநிலங்கள் அறிவித்துகொள்ளலாம்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்