நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.!
சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார். இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது.
இதன்பின் அந்த நாய் ககுட்டிக்கு ‛நூரி’ என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில், நாய்க்குட்டிக்கு ‛நூரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோவை பலரும் ரசித்த நிலையில், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ள ‛நூரி’ எனும் பெயர் தான் சர்ச்சையின் காரணமாக அமைந்தது. இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் கூறுகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி உள்ளதாக அவர் சாடியுள்ளார்.
இந்த நிலையில், சோனியா காந்திக்கு, ராகுல் காந்தி பரிசாக வழங்கிய நாய்க்கு நூரி என்று பெயர் சூட்டியதற்கு, இஸ்லாமிய அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூரி என்ற பெயர் குரானில் இருப்பதாகவும், இந்த பெயரை நாய் குட்டிக்கு வைத்து முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் மகள்கள் ஏராளமானவர்கள் நூரி எனும் பெயரை கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மரியாதையை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது என்று குற்றசாட்டியுள்ளனர்.