ரஜினி பேசிய மாஸ் தத்துவம்.! அரசியல் மேடையில் அப்படியே பேசிய ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா.!
ஆந்திர மாநிலத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பில் உள்ளார். அம்மாநிலத்திற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளது. இதனால் அங்கு தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.
ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி மீது எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா அரசியல் கூட்டத்தில் பேசியுள்ளார்.
சித்தூர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரோஜா , ஜெயிலர் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழமொழியை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், குறைக்காத நாய்யுமில்லை. குறை சொல்லாத வாயுமில்லை. இது இரண்டும் இல்லாத ஊரே இல்லை. என தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் கூறி பவன் கல்யாண் மற்றும் சந்திராபாபு நாயுடு பற்றி விமர்சித்து பேசியுள்ளார்.