அந்த மனசு தான் சார்.! தன் வீட்டை விற்று இலவசமாக தலைக்கவசங்களை வழங்கிய நபர்…

Default Image

தன் வீட்டை விற்று இலவசமாக தலைக்கவசங்களை வழங்கிய ஒருவரின் நெகிழ்ச்சி சம்பவம அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பீகார்: பீகாரைச் சேர்ந்த ராகவேந்திர குமார் என்பவர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு யமுனா விரைவுச் சாலையில் டேங்கர் லாரி ஒன்று தனது பைக்கைப் பின்னால் மோதிய விபத்தில் அவரது நெருங்கிய நண்பர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அதனால், தனது நண்பனின் நிலை யாருக்கும் வரக்கூடாது என எண்ணி, தனது வீட்டை விற்றும், நகைகளை அடகு வைத்தும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு, இதுவரை சுமார் 56,000 தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ்வேயில் இரண்டு இருசக்கர ஓட்டுநருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த தன்னலமற்ற செயலுக்காக நெட்டிசன்களிடம் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்