இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா பகுதியில் இருக்கும் ரயில் தண்டபாலத்தில் கடந்த 21-ம் தேதி தீப்தி ரமேஷ் என்பவரின் சடலம் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.அந்த பெண்ணின் சடலத்தின் அருகில் ஒரு கடிதமும் கைபேசியும் இருசக்கர வாகனமும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் அந்த பெண் அவரது கணவரால் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக எழுதியுள்ளார்.இந்த தகவல் கைபேசி வழியாக அந்த பெண்ணின் தந்தைக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரின் கணவரை கைது செய்துள்ளனர்.மேலும் பிரேத பரிசோதனையில் தலையில் காயம் ஏற்பட்டதால் தான் மரணம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் பெண்ணின் சடலம் கிடந்த இடத்தை தொடர்ந்து உள்ள சி சி டிவி கேமராவை சோதனை செய்து பார்த்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் தீப்தியும் சச்சினும் ஒரே இருசக்கரவாகனத்தில் வந்ததாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் சச்சினை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர் இருவரிடமும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொலை நடந்ததாக கூறியுள்ளார்.
மேலும் இந்த கொலையை தீப்தியின் கணவரின் பேரில் சுமத்த அவரின் கைபேசியில் இருந்து தீப்தியின் தந்தைக்கு அவ்வாறு மெசேஜ் அனுப்பியதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…