20 அடி மலைப்பாம்பின் பிடியிலிருந்து வளர்ப்பு நாயை விடுவித்த நபர்!
20 அடி மலைப்பாம்பின் பிடியிலிருந்து வளர்ப்பு நாயை விடுவித்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் ஒருவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரின் வளர்ப்பு நாயின் அழுகை குரல் கேட்டு திரும்பி பார்த்த பொழுது அவரது பண்ணை வீட்டில் இருந்த நாய்க்குட்டியை 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றி வளைத்து விழுங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் அதைக் கண்ட அந்த நபர் உடனடியாக தனது நண்பர் உதவியுடன் வனத்துறையினரை நாடியுள்ளார்.
உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பின் பிடியில் இருந்து நாயை உயிருடன் காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய நாயின் உரிமையாளர், பலத்த காயங்கள் எதுவும் இன்றி தனது நாய் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது எனவும், 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தற்பொழுது ரிசர்வ் காடுகளுக்குள் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.