மத்திய பிரதேசத்தில் கொரோனா இருப்பதாக நினைத்து மண்ணெண்னை குடித்து உயிரை இழந்த பரிதாபம்.
இந்தியா முழுவதும் கொரோனா சற்றும் குறையாமல் ஏற்படுத்தும் பேரழிவுகளோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் மக்களில் சிலர் அறியாமையால் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா வட்டாரத்தில் வசித்த நபர் 30 வயதுள்ள மகேந்திரா என்பவருக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் இருந்துள்ளது தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், அவரது உடல் வெப்பநிலை குறையவில்லை பின் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் குடித்தால் குணமாகிவிடும் என்று ஒருவர் கூறக்கேட்டு அவரை நம்பி மகேந்திரா கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் மண்ணெண்ணெய் உட்கொண்டுள்ளார்.
மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு படுக்கை கிடைக்காததால் இரண்டு நாட்களுக்கு முன்பு, அஹ்சோகா கார்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு படுக்கை இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவர்கள் அவரை அங்கு மாற்றினர். இதனையடுத்து சனிக்கிழமை அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர், இறப்புக்குபின் அவரது கொரோனா டெஸ்ட் ரிபோர்ட் நெகடிவ் என வந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…