கொரோனாவை எறிக்க மண்ணெண்னை குடித்த நபர்; டெஸ்ட் ரிபோர்ட் நெகடிவ் உயிரை பரித்த சோகம் !

Default Image

மத்திய பிரதேசத்தில் கொரோனா இருப்பதாக நினைத்து மண்ணெண்னை குடித்து உயிரை இழந்த பரிதாபம்.

இந்தியா முழுவதும் கொரோனா சற்றும் குறையாமல் ஏற்படுத்தும் பேரழிவுகளோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில் மக்களில் சிலர் அறியாமையால் தங்களின் உயிரை இழந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் போபாலின் சிவ் நகர் ஹினோட்டியா வட்டாரத்தில் வசித்த நபர்  30 வயதுள்ள மகேந்திரா என்பவருக்கு கிட்டத்தட்ட 5 முதல் 6 நாட்கள் வரை காய்ச்சல் இருந்துள்ளது தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், அவரது உடல் வெப்பநிலை குறையவில்லை பின் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் குடித்தால் குணமாகிவிடும் என்று ஒருவர் கூறக்கேட்டு அவரை நம்பி மகேந்திரா கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் மண்ணெண்ணெய் உட்கொண்டுள்ளார்.

மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு படுக்கை கிடைக்காததால் இரண்டு நாட்களுக்கு முன்பு, அஹ்சோகா கார்டனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு படுக்கை இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, ​​அவர்கள் அவரை அங்கு மாற்றினர். இதனையடுத்து சனிக்கிழமை அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர், இறப்புக்குபின் அவரது கொரோனா டெஸ்ட் ரிபோர்ட் நெகடிவ் என வந்ததுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்