இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த தன் தாயை தோலிலேயே சுமந்து சென்ற மகன் நெஞ்சை உளுக்கிய காட்சி !
இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு நபர் தன் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் சூரம் சிங்குக்கு தகவல் கொடுத்ததாக அந்த நபர் கூறினார், ஆனால் கிராமத்தைச் சேர்ந்த எவரும் உடலை தகனம் செய்ய உதவாததால் தானே தன் தாயை தோலில் சுமந்து தகனம் செய்ததாக செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.
மேலும் இதைப்பற்றி பஞ்சாயத்து தலைவரிடம் கேட்கையில் தான் உடலை தகனத்திற்கு எடுத்து செல்ல பிபிஇ உடை ஏற்பாடு செய்து வருவதாக கூறியபோது அந்த நபர் மறுத்துவிட்டதாகவும்.
மேலும் இரண்டு டிராக்டர்-டிராலி உரிமையாளர்களுடன் பேசியதாகவும், ஆனால் அவர்கள் கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தில் உடலை தங்கள் வாகனங்களில் கொண்டு செல்ல மறுத்துவிட்டனர் என்றும் தெறிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை கமிஷனர் பிரஜாபதி கூறுகையில், சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் வெள்ளிக்கிழமை பங்க்வார் கிராமத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து விசாரித்து, பின் மருத்துவமனைகளில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்களை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தகனம் செய்து வருகிறது, மேலும், இப்போது நிர்வாகம் வீட்டிலேயே இறக்கும் நோயாளிகளையும் தகனம் செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…