உதவிக்கு வராத சொந்த கிராம மக்கள்…உயிரிழந்த தாயை தோலில் சுமந்து சென்று தகனம் செய்த மகன்

Default Image

இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த தன் தாயை தோலிலேயே சுமந்து சென்ற மகன் நெஞ்சை உளுக்கிய காட்சி !

இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு நபர்  தன் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால்  தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் சூரம் சிங்குக்கு தகவல் கொடுத்ததாக அந்த நபர் கூறினார், ஆனால் கிராமத்தைச் சேர்ந்த எவரும் உடலை தகனம் செய்ய உதவாததால் தானே தன் தாயை தோலில் சுமந்து தகனம் செய்ததாக செய்தியாளர்களுக்கு கூறியுள்ளார்.

மேலும் இதைப்பற்றி பஞ்சாயத்து தலைவரிடம் கேட்கையில் தான் உடலை தகனத்திற்கு எடுத்து செல்ல பிபிஇ உடை ஏற்பாடு செய்து வருவதாக கூறியபோது அந்த நபர் மறுத்துவிட்டதாகவும்.

மேலும் இரண்டு டிராக்டர்-டிராலி உரிமையாளர்களுடன் பேசியதாகவும், ஆனால் அவர்கள் கோவிட் தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தில் உடலை தங்கள் வாகனங்களில் கொண்டு செல்ல மறுத்துவிட்டனர் என்றும் தெறிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை கமிஷனர் பிரஜாபதி கூறுகையில், சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் வெள்ளிக்கிழமை பங்க்வார் கிராமத்திற்கு சென்று இந்த சம்பவம் குறித்து  விசாரித்து, பின் மருத்துவமனைகளில் இறக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்களை மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தகனம் செய்து வருகிறது, மேலும், இப்போது நிர்வாகம் வீட்டிலேயே இறக்கும் நோயாளிகளையும் தகனம் செய்யும்  நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்