உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவரை கத்தியால் குத்திய நபர் கைது…சிறிது நேரம் காத்திருக்க கூறியதால் இளைஞன் சீற்றம்!
உத்திரபிரதேசத்தில் பல் மருத்துவர் 21 வயதுள்ள ஒரு இளைஞனால் கத்தி கொண்டு தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பேரில் உ.பி போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.
அதாவது கடந்த சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ஜார்ச்சா கிராமத்தில் வசிக்கும் முகமது குமாயிலிற்கு (21) பல்வலி ஏற்பட்டதை அடுத்து பல் மருத்துவர் அஜய் கோஷ் சர்மாவை (45) தாத்ரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளார்.
மேலும் குமாயில் மருத்துவமனைக்கு சென்ற நேரம் காத்திருக்கும் நேரமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து மருத்துவர் அவரை சற்று நேரம் காத்திருக்குமாறு கூறியிருந்தார், இருப்பினும் சிறிது நேரம் கழித்து குமாயில் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் வாக்குவாதம் முற்றி குமாயில் மருத்துவரை கத்தியால் தாக்கியுள்ளார், இதனையடுத்து மருத்துவர் சர்மா அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
இது குறித்து கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விஷால் பாண்டே கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீஸ் உடனடியாக குமாயிலை கைது செய்ததாகவும், அவர் மீது ஐபிசி பிரிவு 308 இன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் கத்தி மழுங்கிய நிலையில் இருந்ததால் சர்மாவுக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…