மம்தா அரசு VS மத்திய அரசு -இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

Published by
Venu

காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வருகிறது  சிபிஐ மனு.

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்தார்.

சிபிஐ மூலம், மத்திய அரசு தங்களை மிரட்ட முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பதட்டமான சூழ்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

 

இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ், அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம்  இரவு முதல் தொடர்ந்து 2வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டார்  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில்  சிபிஐ மனு தாக்கல் செய்தது.மேலும்  நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்தது சிபிஐ .

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பின்னர் மேற்கு வங்கத்தில் நிலவும் சூழலை கேட்டறிந்த நீதிபதிகள், காவல் ஆணையர் ராஜீவ் குமார் ஆதாரங்களை அழித்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இன்று  விசாரணைக்கு ஒத்தி வைத்தனர்.

Published by
Venu

Recent Posts

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

‘பாக்சிங் டே’ டெஸ்ட் முதல் நாள் : மிரட்டும் பும்ரா., நிலைத்து நிற்கும் ஆஸ்திரேலியா!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…

1 minute ago

மாணவி பாலியல் வழக்கு : ஆன்லைன் எப்.ஐ.ஆர் விவரங்களை முடக்கிய காவல்துறை!

சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…

39 minutes ago

ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “தோழர் நல்லகண்ணு” பெயர்! மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…

1 hour ago

“நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த வரவில்லை.,, வாழ்த்து வாங்க வந்தேன்” மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…

2 hours ago

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

3 hours ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

5 hours ago