ஓலா, ஊபர் வாகன சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடு.? மகாராஷ்டிரா அரசு புதிய உத்தரவு.!
ஓலா,, ஊபர் போன்ற இணையதள செயலிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மகாராஷ்டிரா அரசு புதிய குழுவை நியமித்துள்ளது.
இணையதள செயலியான ஓலா மற்றும் ஊபர் போன்ற செயலிகள் மூலம் வாடகைக்கு கார் எடுத்து மக்கள் உபயோகிப்பர். இந்த ஓலா, ஊபர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க, தற்போது புதிய விதிமுறைகளை மகாராஷ்டிரா அரசு குழு அமைத்துள்ளது.
இந்த குழுவின் 6 முக்கிய நபர்கள் உள்ளனர். இந்த குழுவுக்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சுதிர் ஸ்ரீவத்சவா தலைமை வகிக்க உள்ளார். இந்த குழு மூலம் இணையதள செயலிகளுக்கு கட்டுப்பாடுகள், விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் விதிமுறைகள் விரைவில் மாநில அரசால் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.