உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே விலங்குகளால் உண்ணப்பட்ட நிலையில், குழந்தையின் உடல் மீட்பு.
உத்திரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், மௌசமாபாத் கிராமத்தில், புறநகரில் உள்ள ஒரு குளம் அருகே ஒன்பது மாத பெண் குழந்தையின் பாதியளவு உடல் சாப்பிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டின் முற்றத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த போது குழந்தை காணாமல் போனதாக, குழந்தை ஷிவானியின் பெற்றோர் பூல்பேஹாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) விஜய் துல், குழந்தையை கண்டுபிடிப்பதற்காக இரண்டு குழுக்களை நியமித்தார். இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங் தலைமையிலான குழுவினர் சடலத்தை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இன்ஸ்பெக்டர் ஷ்யாம் நாராயண் சிங், ஷிவானியின் வீடு கிராமத்தின் விளிம்பில் உள்ளது மற்றும் விவசாய வயல்களால் சூழப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருக்கும் கரும்பு பயிர்களுக்கு மத்தியில் பன்றிகள், ஓநாய்கள் மற்றும் சிறுத்தைகள் போன்ற பல மாமிச உண்ணிகள் பதுங்கியுள்ளன. சமீபத்தில், ஓநாய்கள் கூட்டம் கிராமத்தில் இரண்டு ஆடுகளை கொன்றது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதில், பரிசோதனை முடிவுகள், குழந்தை மிருகத்தால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சில காட்டு விலங்குகள் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. ஏற்கனவே, ஜூலை 29 அன்று, மாவட்டத்தின் மைகல்கஞ்ச் பகுதியில் இதேபோல் மூன்று வயது சிறுமி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…