தனது காதலியை ப்ரெஷர் குக்கரால் அடித்து கொன்ற காதலன்..!
பெங்களூரில் லிவின் டூ கெதர் உறவிலிருந்த காதலியை, காதலன் குக்கர் மூடியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொன்று விட்டு காதலன் தப்பி ஓடியுள்ளார். செல்போன் எண்ணை வைத்து போலீசார் குற்றவாளியை தேடிக் கண்டு பிடித்து கைது செய்தனர் .
கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவ், தேவி இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெங்களூரு மைக்கோ லேஅவுட்டில் அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர். இரண்டு வருடங்களாக ஒன்றாக கணவன் – மனைவி போல வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை எழுந்து வந்துள்ளது.
இந்த நிலையில், தேவி வேறொரு நபருடன் பேசுவதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த வைஷ்ணவ், சமையலுக்காக வைத்திருந்த குக்கரை எடுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மும்பையில்லிவின் டூ கெதர் உறவிலிருந்த போது காதலி துண்டு துண்டாக வெட்டி படுகொலை, டெல்லியில் காதலியை கொன்று உடலை ப்ரிட்ஜில் வைத்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பெங்களூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.