அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில்-சாலைப் பாலத்தை பிரதமர் மோடி 25-ம் தேதி திறந்து வைக்கிறார்…!!
அசாமில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான ரயில் மற்றும் சாலைப் பாலம் லேசர் விளக்குகளால் மின்னியது, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.
அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, 4 புள்ளி 94 கிலோ மீட்டர் நீளத்துக்கு போகிபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள போகிபீல் பாலத்தின் கீழடுக்கில் இருவழி ரயில்பாதையும், மேலடுக்கில் 3 வழிச்சாலைகளும் அமைந்துள்ளன. ஐந்தாயிரத்து 960 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட பாலத்தை, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் பாலம் முழுவதும் லேசர் வண்ண ஒளியில் மின்னிய காட்சிகள் காண்போரின் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது.