#Breaking:இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை,மாநிலங்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர்.இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் நடத்த முடியாமல் போய்விட்டது.இது தொடர்பாக மத்திய அரசு இந்த எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது.
இந்த நிலையில்,நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,நேற்று மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பை மாநிலங்களவை துணைத் தலைவர் தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின் போது, இந்த எம்.பி.க்கள் சபாநாயகரை அவமதித்ததாகவும், அவையின் அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி காங்கிரஸைச் சேர்ந்த ஆறு பேர், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவைச் சேர்ந்த தலா இருவர், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் உட்பட 12 எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் முழு அமர்விற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து,எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில்,நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்கிய நிலையில்,நேற்று மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டது.மேலும்,காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அதே சமயம்,எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.இதனைக் கண்டித்து,எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனால்,இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Opposition MPs stage walkout from Rajya Sabha after House Chairman M Venkaiah Naidu rejects revocation of suspension of 12 MPs.
(Source: Sansad TV) pic.twitter.com/mil91JbSaz
— ANI (@ANI) November 30, 2021