எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி..! மக்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு..!
எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி காரணமாக மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 3 வது நாளாக தொடங்கப்பட்ட மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் துவங்கியது. அப்பொழுதே, எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் நேற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது.
அதே போல நேற்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு துவங்கியது முதல், ஆளும் கட்சியினர், ராகுல் காந்தி இங்கிலாந்தில், இந்தியா பற்றி உரையாற்றியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்கட்சியினர், அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க வேண்டும் எனவும் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். அதனால் 2 நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
தற்பொழுது 3 வது நாளாக மக்களவை கூடிய நிலையில் எம்பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் குறித்த ராகுல்காந்தியின் பேச்சு குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்திவைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.