ஓய்ந்தது மக்களவை தேர்தல் பிரச்சாரம்.. நாளை மறுநாள் இறுதி கட்ட வாக்குப்பதிவு.!
மக்களவை தேர்தல் : இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. ஜூன் 1ம் தேதி 7 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இதில் கடைசிக் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.
ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நிறைவு பெற்று, ஜூன் 4ம் தேதி அன்று 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான இறுதி பிரச்சாரம் இதுவே. தேர்தல் விதிகளின்படி, தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்கும் வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இன்று 5 மணிக்கு மேல் இருக்கக்கூடாது.
இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
பிரதமர் மோடி போட்டியிடும் உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதி உட்பட உ.பி, பிஹார், ஒடிஷா, சண்டிகர், இமாச்சல், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்
- பிரதமர் நரேந்திர மோடி (பாஜக) – உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி
- ரவி கிஷன் (பாஜக) – உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதி
- கங்கனா ரனாவத் (பாஜக) – ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி
- அனுராக் தாக்குர் (பாஜக) – இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதி
- மிசா பார்தி (ஆர்ஜேடி) – பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதி
- அபிஷேக் பானர்ஜி (டிஎம்சி) – மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பர் தொகுதி
- சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்) – பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதி
- ஹர்சிம்ரத் கவுர் பாதல் (எஸ்ஏடி) – பஞ்சாப் மாநிலம் பதிண்டா தொகுதி