சிறுமியின் மானத்தை காப்பாற்றிய சிறுவர்கள்!பரபரப்பான தகவல்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் வசித்து வருபவர்கள் மனீஷ், படேல், அமித், ரோஹித். இவர்கள் பள்ளிவேளை முடிந்தவுடன் அருகில் உள்ள ஒதுக்குபுறமான இடத்தில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.
அதே மாதிரி கிரிக்கெட் விளையாட அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது தூரத்தில் யாரோ அழுவது போல் சத்தம் கேட்டுள்ளது.அந்த சத்தத்தை பின்தொடர்ந்து சென்ற மாணவர்கள் ஒரு புதருக்குள் சிறுமியிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதை கண்டுள்ளனர்.
உடனே என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுள்ளனர்.ஆனால் எப்படியாவது சிறுமியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுவர்கள் தங்கள் கையில் இருந்த பேட்டை வைத்து அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அந்த நபரும் அவர்களை தாக்க ஆத்திரம் அடைந்த சிறுவர்கள் ஸ்டம்புகளாலும், பேட்டாலும் அந்த நபரை தாக்கி மயக்கமடைய செய்துள்ளனர்.அதன் பின்பு ஒரு சிறுவன் ஓடி வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மயங்கி கிடந்த அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து செய்த இந்த வீர செயல் அனைவரிடமும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.