அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்..! பீதியடைந்த மாணவர்கள்..!
தானேவில் உள்ள பள்ளியில் ஆசிரியருக்கான லிப்டில் சென்ற மாணவர்களில் இரண்டு பேர் பீதியடைந்தனர்.
வெள்ளிக்கிழமை, தானேவின் பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET வகுப்பு முடிந்த நிலையில் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்காக ஆசிரியர்களுக்கான லிப்ட்டில் சென்றுள்ளனர்.
இவர்களோடு 5 முதல் 6 மாணவர்கள் உடன் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லிப்ட்டானது அதிக எடைக் காரணமாக நடுவழியில் நின்றதால் இரண்டு மாணவர்களும் பீதியடைந்துள்ளனர். சில நிமிடங்களில் ஆசிரியர்கள் லிப்ட்டை திறந்து மாணவர்களை மீட்டனர்.
இந்த சம்பவத்தில் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பள்ளிக்கு அருகில் உள்ள வர்தக் நகர் காவல் நிலையம் மற்றும் பச்பகாடி தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மதியம் 3.30 மணிக்கு தகவல் தெரிவித்தனர்.