நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் போலியானது..! கர்நாடக காங்கிரஸ்

KarnatakaCongress

நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை போலி எனக் கூறி கர்நாடக காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானது என காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. அந்த கடிதத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செவிசாய்க்கவில்லை என்றும், அவர்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 10 எம்எல்ஏக்களில் ஒருவர், அந்தக் கடிதம் தனிப்பட்ட அறிக்கை என்றும், வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வான பி.ஆர்.பாட்டீலும், கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, பாஜக தான் அதை உருவாக்கியதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Letter
Letter

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்