மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது.
கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடிதம் பற்றி கர்நாடக காவல்துறை சார்பில் கூறுகையில், இப்படி ஒரு அமைப்பை இதுவரை நாங்கள் கேள்வி பட்டதில்லை. இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…