உங்கள் கொள்கையை விட நாட்டின் சட்டம் தான் முக்கியம் – ட்விட்டர் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற குழு சம்மன்!

Default Image

இந்திய மண்ணின் சட்டம் தான் முக்கியம், உங்கள் கொள்கை முக்கியமல்ல என ட்விட்டர் நிறுவன பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தளத்தை தவறாக பயன்படுத்துவது மற்றும் பயனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கடந்த வாரம் டுவிட்டர் நிறுவனத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி, டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான பொதுக்கொள்கை மேலாளர் சகுப்தா காம்ரன், சட்ட கவுன்சில் ஆயுஷி கபூர் நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளத்தனர். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் ட்விட்டர் பிரதிநிதிகளின் கருத்துக்கள் அனைத்தும் கேட்கப்பட்டு உள்ளது.

அதன் பின்பதாக டுவிட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளில் விதிமுறைகளை மீறி உள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளது. செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறையின் போது எத்தனை ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன என்ற விவரத்தை தெரிவிக்குமாறும் இந்த நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த பாஜக உறுப்பினர் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்திய மண்ணின் சட்ட விதிமுறைகள் தான் மேலானது எனவும், டுவிட்டர் நிறுவனத்தின் கொள்கைகள் முக்கியம் அல்ல எனவும் டுவிட்டர் நிறுவனம் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் விதிமுறைகளை மீறியதற்காக ட்விட்டர் நிருவத்திற்கு அபராதம் விதிக்கலாமே எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்