‘சட்டம் ஒருபோதும் குருடாகாது’! கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலை!
கணங்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதை சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார்.
டெல்லி : நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதைகளின் சிலையானது கண்கள் கட்டப்பட்டு, இடது கையில் தராசு, வலது கையில் வாள் என அமைந்திருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும்.
இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அவர் திறந்து வைத்த அந்த நீதி தேவதை சிலையில், நம் வழக்கமாய் காணும் அடையாளங்களை முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
மேலும், ‘சட்டத்தின் முன் சமத்துவம்’ என்பதை வலியுறித்திட வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த புதிய நீதி தேவதை சிலையில், கண்களில் கட்டப்பட்ட கருப்பு துணி அகற்றப்பட்டதுடன், கையில் இருக்கும் வாளுக்கு பதிலாக ‘அரசியல் சாசன புத்தகமும்’ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த புதிய சிலை என்ன கூறவருகிறது எனும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதில், ‘சட்டம் ஒருபோதும் குருடாகாது என்பதையும், அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதையும் வலியுறுத்தி நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது எனவும் ‘அரசியல் சட்டம் வன்முறை மூலம் அல்ல, நாட்டின் சட்டங்களின்படி நீதி வழங்கப்படுகிறது’ என்பதை குறிக்கும் வகையில் அரசியலமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது’ என கூறப்படுகிறது.
இப்படி நீதி தேவதையின் சிலையை மாற்றம் செய்து அதனை உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய சிலையானது, தலையில் கிரீடம் மற்றும் நெற்றித் திலகத்துடன் இருக்கும் வகையிலும் வடிவமைப்பட்டுள்ளது.