என்கவுண்டர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது..! காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம்..!
- என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல் 06.15-க்குள் நடந்ததாக கூறினர்.பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.
- அப்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டது.
- குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது , ஜொள்ளு சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய நான்கு பேரையும் போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குற்றவாளி நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர்.இதனால் போலீசார் தற்காப்புக்காக நான்கு பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.அதில் என்கவுண்டர் சம்பவம் காலை 05.45 மணி முதல் 06.15-க்குள் நடந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பெண் மருத்துவர் பிரியங்கா செல்போன் உள்ளிட்ட பொருள்களை வைத்திருப்பதாகக் கூறி அதை எடுக்க அழைத்து வந்தோம்.அப்போது 4 பேரையும் அழைத்து சென்றபோது 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக சென்றிருந்தனர்.
சென்ன கேசவலு , முகமது ஆகியோர் எங்களுடைய துப்பாக்கி எடுத்து மிரட்டினர். மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளும் கற்களைக் கொண்டு எங்களை தாக்கினர். குற்றவாளிகள் நான்கு பேர் தாக்கியபோது கூட போலீஸ் அமைதியாக இருந்து சரணடைய வேண்டும் என கூறினார்.
குற்றாவளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறியுள்ளார்.