பிரபல இந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலமாக நேற்று மும்பை கொண்டுவரப்பட்ட நிலையில், அவருக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
பிரபல இந்திய திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் துபாயில் ஒரு திருமண விழாவை முடித்த பின்னர் அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 24ம் தேதி குளியல் தொட்டியில் சுயநினைவு இன்றி, தடுமாறி விழுந்து இறந்தார். அவர் முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என்று அவரது கணவர் போனீ கபூரின் உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் அதிகப்படியான மதுவை அருந்திருந்தார் என அவரது ரத்தத்தில் கண்டுள்ளதாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவித்தது அந்நாட்டு போலீசார், அந்த போதையின் காரணமாக சுயநினைவை இழந்து, அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரது மரணம் தொடர்பாக துபாய் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், ஸ்ரீதேவி மரணத்தில் எவ்வித சந்தேகமும் எழுந்திடாத காரணத்தால், அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் ஸ்ரீதேவியின் உடல், இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
சரியாக இரவு 10.30க்கு மும்பை கொண்டுவரப்பட்ட அவரது உடலை பார்க்க அவரது ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் கணவர் போனீ கபூரின் இல்லத்தில் திரண்டிருந்தனர். மும்பை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் ஊர்தி ஒன்று மூலம் கணவர் போனீ கபூரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் இல்லம் அருகே உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில், இன்று காலை, 9:30 மணி முதல் பகல், 12:30 மணி வரை அவரது உடல்,ரசிகர்கள்,திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் மாலை 3:30 மணிக்கு, பின்னர் மும்பையில் உள்ள விலே பார்லேயில் உள்ள மின் மயானத்தில், ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…