ஏர்பஸ் விமான வரலாற்றில் மிகப்பெரிய விமான ஆர்டர்… 500 விமானங்களை வாங்கும் இண்டிகோ.!
இண்டிகோ நிறுவனம் வணிக விமான வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய விமான ஆர்டரை செய்துள்ளது.
விமானங்களுக்கான பட்ஜெட் நிறுவனமான இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம், 500 புதிய A320 விமானங்களுக்கான ஆர்டர் செய்துள்ளதாக பிரெஞ்சு ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் “வணிக விமானப் போக்குவரத்து வரலாற்றில், மிகப்பெரிய ஒற்றை(Single) கொள்முதல் ஒப்பந்தம் என்ற சாதனையாக உள்ளது என ஏர்பஸ் (EADSY) ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
இந்த விமானங்கள் 2030 மற்றும் 2035 க்கு இடையில் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006 இல் நிறுவப்பட்ட இண்டிகோ நிறுவனம், கடந்த நிதியாண்டில் 86 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் வலுவான பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ந்து வரும் மக்கள்தொகையைப் பயன்படுத்திக் கொள்ள ஏவியேஷன் நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. கடந்த பிப்ரவரியில், இண்டிகோவின் போட்டியாளரான ஏர் இந்தியா ஏர்பஸ் மற்றும் போயிங்க் 470 க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்களை ஆர்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.