அண்ணனின் படுக்கையை அடுத்தவனுக்கு பகிர்ந்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்!

Default Image

அண்ணன் உயிரிழந்த பின்பு அன்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்ததால், டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொழுந்தன்.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் எனும் கிராமத்தில் கணவனை இழந்த விதவை பெண்மணி ஒருவர் தனது மாமனார் மற்றும் கொழுந்தனுடன் வாழ்ந்து வருகிறார். தற்பொழுது 32 வயதுடைய மரியா எனும் இந்த பெண் தனது 22 ஆவது வயதிலேயே அதாவது 10 வருடத்திற்கு முன்னதாகவே கணவரை இழந்துவிட்டார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பகவத் எனும் 27 வயதுடைய நபருடன் மரியா தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த விஷயம் அறிந்த அப்பெண்ணின் மாமனார் மற்றும் கொழுந்தன் ஆகிய இருவரும் கோபத்துடன் அடிக்கடி அதட்டி வந்துள்ளனர். கணவனின்றி வாழ்ந்து வந்த அப்பெண் இவர்களின் பிரச்சனை தாங்காமல் தனது கள்ளக்காதலன் பகவத் உடன் குஜராத்துக்கு ஓடி சென்றுள்ளார். காணவில்லை என இவர்களை குறித்து அவர்களின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் மகாராஷ்டிராவில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.

அதன் பின் இருவரும் அக்கிராமத்தில் சேர்ந்து வசித்து வந்ததால் அப்பெண்ணின் மாமனாரும், கொழுந்தனுக்கு அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டு, டிராக்டரை ஏற்றி அப்பெண்ணையும், பக்கத்தையும் கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்