கேரளா அரசு ” பெவ் கியூ” என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் டோக்கன் பெற்று குறிப்பிட்ட கடையில் சென்று மது வாங்கி கொள்ளலாம்
கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகாரித்தவண்ணமே உள்ளது . இதுவரை 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரும் 31 தேதியில் முடிவடைகிறது. அனைத்து மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால்,கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் மதுக்கடைகள் மூடப்பட்டது. அதன்பிறகு கேரளா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்ட்டது அதில் மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று வருபவர்களுக்கு மது கொடுக்கப்படும் என்று தெரிவித்தது .
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது .அதன்பின்னர் மத்திய அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்தது. இதனால், டெல்லி, கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்,கேரள அரசு மதுக்கடைகளை திறக்காமல் கள்ளுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது .
இந்நிலையில், கடந்த வாரம் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன மேலும் அங்கு வரும் கூட்டத்தை தவிர்க்க செல்போன் செயலியின் மூலம் மது விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, கேரளா அரசு ” பெவ் கியூ” என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் டோக்கன் பெற்று குறிப்பிட்ட கடையில் சென்று மது வாங்கி கொள்ளலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடக்கும். ஆனால், பார்களில் பார்சல் மட்டுமே அனுமதி, அமர்ந்து மது அருந்த அனுமதியில்லை.
“பெவ் கியூ” செயலியை உருவாக்கிய கொச்சியை தளமாகக் கொண்ட ஃபேர்கோட் நிறுவனம், பலமுறை முயற்சி செய்தும் கூகுள் பிளே ஸ்டோரில் “பெவ் கியூ” செயலிக்கு கூகுளிடமிருந்து அனுமதி பெற முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுள் அனுமதி கிடைத்த பின்னரே பயன்பாட்டை வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…