தி கேரளா ஸ்டோரி திரைப்படம்… தமிழகம் மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.!

TheKeralaStory

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் திரையிட்ட திரையரங்கம் தாக்கப்பட்டது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

கடந்த வாரம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி சர்ச்சையான நிலையில், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கூறிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சில மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவெடுத்தனர், திரைப்படம் வெளியான தொடக்கத்தில் திரையிடப்பட்ட சில திரையரங்குகள் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த திரைப்படம் வெளியிட தடை செய்யப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரித்த தலைமை நீதிபதி, மற்ற மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகும் போது, மேற்குவங்க மாநிலத்தில் ஏன் திரையிடப்பட வில்லை என அம்மாநில அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தமிழகத்தில் திரையரங்குகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் பதிலளிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்