லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம்..!

Default Image
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலை நீக்கக்கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லட்சத்தீவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல், அப்பகுதியில் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வந்தார்.அதாவது,
  • முஸ்லீம்கள் அதிகம் உள்ள லட்சத்தீவில் மாட்டிறைச்சி தடை,
  • தீவுகளில் குற்ற விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் குண்டர் சட்டத்தை அறிமுகப்படுத்துதல்,
  • இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் தேர்தலில் நிற்க தடை,
  • நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்ட சட்டங்களை இயற்றுதல்,
  • கடலோர மக்களின் குடில்கள் அகற்றம்,
  • மது விலக்கு நீக்கம்,
  • லட்சத்தீவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் களைப்பு போன்ற திட்டங்களை அமல்படுத்தினார்.
இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து,கேரள அரசானது,லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்,பிரபுல் கோடா படேலை லட்சத்தீவில் இருந்து திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
மேலும்,காங்கிஸ் எம்.பி ராகுல் காந்தி,மத்திய அரசு இந்த விவகாரத்தில்  தலையிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தினார்.
இந்நிலையில்,லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை நீக்கக் கோரி கேரள சட்டசபையில் தற்போது தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும், முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்,பிரபுல் கோடா படேலை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கோரி  தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
அந்த தீர்மானத்தில் முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது ,”லட்சத்தீவில் பா.ஜ.க தனது  நிகழ்ச்சி நிரலை நிலை நாட்டுவது மற்றும் பெருநிறுவன நலன்களை திணித்து செயல்படுத்துவதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. எனவே,அந்த முயற்சிய தவிர்த்து லட்சத்தீவு மக்கள்,அவர்களது வாழ்வாதாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக முதல்வர் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்த பின்னர்,சட்டசபையில் நகர்த்தப்பட்ட முதல் தீர்மானம் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்