மனைவியை தொட்டு மருத்துவம் பார்த்ததால் டாக்டருக்கு ‘பளார்’.! கணவருக்கு ஜாமீன் தர மறுத்த நீதிமன்றம்.!

Default Image

சிகிச்சை பார்க்கும் போது தனது மனைவியை தொட்டதாக மருத்துவரை தாக்கிய நபருக்கு ஜாமீன் மறுத்துள்ளது கேரள உயர்நீதிமன்றம் .

கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வினோத வழக்கு ஒன்று அண்மையில் வாதிடப்பட்டது. அதாவது, கேரளாவை சேர்ந்த நபர் , தனது மனைவியை சிகிச்சை பார்க்கும் போது மருத்துவர் தனது மனைவியை தொட்டதாக கூறி அந்த நபர் மருத்துவரை தாக்கியுள்ளார்.

சிகிச்சை : ஜனவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு விபத்தில் 27 வயது பெண் காயமுற்று இருக்கையில், அப்போது அந்த பெண்ணின் கணவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளிக்க முற்பட்டுள்ளார். அப்போது தனது மனைவியில் உடல் பாகங்களை மருத்துவர் தொட்டார் என கூறி, அந்த மருத்துவர் சட்டையை பிடித்து அந்த பெண்ணின் கணவர் அடித்துள்ளார்.

ஜாமீன் மனு : இதனை அடுத்த அந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தார். அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

நீதிபதி கேள்வி : அதில், மருத்துவர் எப்படி நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க முடியும்.? மருத்துவர்கள் கழுத்தில் எப்போதும் ஸ்டெதஸ்கோப் இருக்கும். அதனை வைத்து மார்பில் தொட்டு இதயத்துடிப்பு பார்க்க வேண்டும். இந்த சம்பவத்தின் காரணமாக இதனையெல்லாம் மருத்துவர்கள் செய்யாமல் விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்தாக மாறிவிடும். என கூறினார்.

ஜாமீன் மறுப்பு : மேலும், ஏதேனும் ஒரு சில மருத்துவர் தவறான நோக்கத்துடன் நோயாளிகளை அணுகினால் அதனை சுட்டிக்காட்ட வேண்டியதும் கடமை எனவும் குறிப்பிட்டார். இந்த வழக்கில் மருத்துவரை அடுத்தவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்